TNPSC Thervupettagam

வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட முனையம்

February 26 , 2020 1607 days 576 0
  • மும்பை விமான நிலையமானது சமீபத்தில் வேளாண் மற்றும் மருந்து தயாரிப்புகளை சேமித்து வைக்கும் உலகின் மிகப்பெரிய வெப்பநிலைக் கட்டுப்பாட்டு வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள “ஏற்றுமதி குளிர்ச்சி மண்டலமானது” 700 டன்களுக்கும் அதிகமான சரக்குகளை வைத்திருக்கும் திறன் கொண்டது.
  • மும்பை விமான நிலையமானது IATA CEIV PARMA அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் சில விமான நிலையங்களில் ஒன்றாகவும் நாட்டின் முதலாவது விமான நிலையமாகவும் ஆசியாவில் மூன்றாவது விமான நிலையமாகவும் திகழ்கின்றது.
  • இது சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்தினால் (IATA - International Air Transport Association) வழங்கப்படும் ஒரு அங்கீகாரமாகும்.
  • உலகெங்கிலும் உள்ள மருந்துத் தயாரிப்புகளின் விநியோகத் தொடரை மேம்படுத்தும் பொருட்டு, மருந்துத் தளவாடத்தில் சுயாதீன மதிப்பீட்டாளர்களுக்கான சிறப்புமிகு மையமானது (Centre of Excellence for Independent Validators in Pharmaceuticals Logistics - CEIV Pharma) IATAயினால் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்