பெருங்கடலில் உணவுச் சங்கிலியின் அடித்தளமாக இருந்து வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் நுண்பாசிகள் (மைக்ரோஅல்காக்கள்) ஆனது புவி வெப்பமடைதலை எதிர்கொள்ள ஒரு தனித்துவமான உத்தியை சார்ந்திருப்பதாகத் தோன்றுகிறது.
பருவநிலை மாற்றம் கடலில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் அளவைக் குறைப்பதால், கடல் வாழ் நுண்ணுயிர்கள் அல்லது யூகாரியோடிக் (நிலையற்ற உட்கரு கொண்ட) செல் கொண்ட மிதவைத் தாவரங்கள் ரோடாப்சின் என்ற புரதத்தை எரித்து தனது ஊட்டத்தினைப் பெறுகின்றன.
இது மங்கலான ஒளியில் கண் பார்வை தெளிவிற்குக் காரணமான மனித கண்ணில் உள்ள புரதத்துடன் தொடர்புடையதாகும்.
இந்த ஒளி உணர் புரதம் ஆனது, வழக்கமான குளோரோபிலுக்குப் பதிலாக சூரிய ஒளியின் உதவியுடன் நுண்பாசிகள் செழித்து வாழ உதவுகிறது.
அவை ஆற்றலையும் உணவையும் உருவாக்க ஒளியை உறிஞ்சுகின்ற குளோரோபில் அடிப்படையிலான ஒளிச்சேர்க்கையைப் போலவே கடலில் உள்ள அதிக ஒளியை உறிஞ்சுகிறது.