TNPSC Thervupettagam

வெப்பமிகு நட்சத்திரங்கள் மற்றும் வெண் குறுமீன்கள் கண்டுபிடிப்பு

January 6 , 2023 692 days 333 0
  • இந்திய வானியற்பியல் கழகத்தின் (IIA) வானியலாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள், வெப்பமிகு நட்சத்திரங்கள் மற்றும் வெண் குறுமீன்கள் ஆகியவை எதிர்பார்த்ததை விட குறைவான அளவிலேயே புற ஊதாக் கதிர்வீச்சை வெளியிடுவதாகக் கண்டறிந்து உள்ளனர்.
  • நமது அண்டத்தில் உள்ள மிகப் பெரிய கோள வடிவ விண்மீன் திரள் அமைப்பான ஒமேகா சென்டாரியைப் ஆய்வு செய்யும் போது இது கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த நட்சத்திரங்களால் வெளிப்படும் குறைவான புற ஊதா கதிர்வீச்சுக்கு ஹீலியத்தின் விரிவாக்கமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று இவர்கள் கூறுகின்றனர்.
  • ஆஸ்ட்ரோசாட் ஆய்வகத்தில் உள்ள புற ஊதா வரைபடமிடல் தொலைநோக்கியின் மூலம் பெறப்பட்ட படங்களைப் பயன்படுத்தி இந்த விண்மீன் திரளில் உள்ள விசித்திரமான வெப்பமிகு நட்சத்திரங்களை இந்த ஆராய்ச்சிக் குழு கண்டறிந்தது.
  • 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிற ஆஸ்ட்ரோசாட் இந்தியாவின் முதல் பிரத்தியேக விண்வெளி ஆய்வகம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்