வெப்பம் மற்றும் நீர் நெருக்கடி சார்ந்தப் பிரச்சினைகளின் உலகளாவியத் தாக்கங்கள் – அறிக்கை
June 30 , 2024 146 days 220 0
வெப்பம் மற்றும் நீர் நெருக்கடி சார்ந்தப் பிரச்சினைகளால் 2050 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய உணவு உற்பத்தி 6 முதல் 14 சதவீதம் வரை குறையும்.
இது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை 1.36 பில்லியன் வரை (2020 ஆம் ஆண்டில் இருந்த அளவுடன் ஒப்பிடும்போது) அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, நிகர உணவு ஏற்றுமதியாளர்களாக உள்ள சீனா மற்றும் ஆசியான் நாடுகள் போன்ற பிராந்தியங்கள் 2050 ஆம் ஆண்டிற்குள் உணவு இறக்குமதி நாடுகளாக மாறலாம்.
இந்தியாவில், பருவநிலை மாற்றத்தின் மோசமான சூழ்நிலையில், நீர் மற்றும் வெப்பம் சார்ந்த நெருக்கடிகளின் விளைவாக 2050 ஆம் ஆண்டில் உணவு உற்பத்தி 16.1 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 22.4 சதவீதமும், அமெரிக்காவில் 12.6 சதவீதமும் குறையும் என கணிக்கப் பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் உணவு உற்பத்தியானது, சுமார் 8.2 முதல் 11.8 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 14.7 சதவீதமும், மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் 19.4 சதவீதமும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகளவில், 2020 ஆம் ஆண்டில் இருந்த அளவுடன் ஒப்பிடும்போது, 2050 ஆம் ஆண்டில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை என்பது 556 மில்லியன் முதல் 1.36 பில்லியன் என்ற ஒரு இடைப்பட்ட எண்ணிக்கையில் அதிகரிக்கக் கூடும்.