TNPSC Thervupettagam

வெப்பம் மற்றும் நீர் நெருக்கடி சார்ந்தப் பிரச்சினைகளின் உலகளாவியத் தாக்கங்கள் – அறிக்கை

June 30 , 2024 12 hrs 0 min 63 0
  • வெப்பம் மற்றும் நீர் நெருக்கடி சார்ந்தப் பிரச்சினைகளால் 2050 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய உணவு உற்பத்தி 6 முதல் 14 சதவீதம் வரை குறையும்.
  • இது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை 1.36 பில்லியன் வரை (2020 ஆம் ஆண்டில் இருந்த அளவுடன் ஒப்பிடும்போது) அதிகரித்துள்ளது.
  • இதன் காரணமாக, நிகர உணவு ஏற்றுமதியாளர்களாக உள்ள சீனா மற்றும் ஆசியான் நாடுகள் போன்ற பிராந்தியங்கள் 2050 ஆம் ஆண்டிற்குள் உணவு இறக்குமதி நாடுகளாக மாறலாம்.
  • இந்தியாவில், பருவநிலை மாற்றத்தின் மோசமான சூழ்நிலையில், நீர் மற்றும் வெப்பம் சார்ந்த நெருக்கடிகளின் விளைவாக 2050 ஆம் ஆண்டில் உணவு உற்பத்தி 16.1 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • சீனாவில் 22.4 சதவீதமும், அமெரிக்காவில் 12.6 சதவீதமும் குறையும் என கணிக்கப் பட்டுள்ளது.
  • ஆப்பிரிக்காவில் உணவு உற்பத்தியானது, சுமார் 8.2 முதல் 11.8 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 14.7 சதவீதமும், மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் 19.4 சதவீதமும் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • உலகளவில், 2020 ஆம் ஆண்டில் இருந்த அளவுடன் ஒப்பிடும்போது, ​​2050 ஆம் ஆண்டில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை என்பது 556 மில்லியன் முதல் 1.36 பில்லியன் என்ற ஒரு இடைப்பட்ட எண்ணிக்கையில் அதிகரிக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்