வெப்ப அலைகள் – குறிப்பிட்ட மாநிலம் சார்ந்தப் பேரழிவு
November 1 , 2024 29 days 124 0
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்பு பதிவான நிலையில், மாநில அரசு வெப்ப அலையை ஒரு பேரிடராக அறிவித்துள்ளது.
ஏற்கனவே சில மாநிலங்களான சத்தீஸ்கர், ஓடிஸா, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மற்றும் கர்நாடகா ஆகியன வெப்ப அலையினை மாநிலம் குறிப்பட்டப் பேரிடர்களாக அறிவித்துள்ளன.
இந்தியாவில் வெப்ப அலைகள் தற்போது தேசியப் பேரிடராக அறிவிக்கப் படாததால், 2005 ஆம் ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஒன்றிய அரசிடம் இருந்து இதற்காக நிதி உதவியினை மாநிலங்கள் பெற இயலாது.
இந்த ஒரு அறிவிப்பின் மூலம், வெப்ப அலையால் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
இந்த முயற்சிகளுக்கு வேண்டி மாநில அரசாங்கம் மாநிலப் பேரிடர்ப் பதிலெதிர்ப்பு நிதியினைப் பயன் பயன்படுத்தும்
கோடைக் காலங்களில் ஈரப்பதம் அதிகரிக்கும் வகையிலான நீண்டக் கடற்கரையை தமிழ்நாடு கொண்டுள்ளது.
மதுரை, திருச்சி, வேலூர், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி போன்ற நகரங்களில் இரவு நேரங்களிலும் வெப்பத்தை உறிஞ்சி வெளியிடும் பாறை குன்றுகள் உள்ளன.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய சில மாவட்டங்களில் முறையே 31 மற்றும் 26 நாட்களுக்கு 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகியவற்றில் தலா 23 மற்றும் 21 நாட்களுக்கு அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.