மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது, வெப்ப அலையினை ஒரு அறிவிக்கப்பட்டப் பேரிடராக வகைப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்று அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்டப் பேரிடராக அது அறிவிக்கப்பட்டால், 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் நிதி உதவி பெறத் தகுதியுடையதாக மாறும்.
தற்போது தேசியப் பேரிடர் நிவாரண நிதி/மாநிலப் பேரிடர் நிவாரண நிதி (SDRF) உதவிக்கு தகுதியான பேரிடர்களின் அறிவிக்கப்பட்ட பட்டியலில் 12 பேரிடர்கள் உள்ளன.
அவை புயல், வறட்சி, நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளம், சுனாமி, ஆலங்கட்டி மழை, நிலச்சரிவு, பனிச்சரிவு, மேக வெடிப்பு, பூச்சிகளின் தாக்குதல் மற்றும் உறைபனி மற்றும் குளிர் அலை ஆகியவையாகும்.
இந்தியாவில் இந்த ஆண்டின் கோடை காலத்தில் 536 வெப்ப அலை நிகழ்வுகள் நிகழ்ந்த நிலையில் இது 14 ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கையாகும்.