நல் மின்கடத்து திறனையும் (electrical conductivity), 24OC முதல் 425OC வெப்பநிலையில் குறைவான வெப்ப கடத்து திறனையும் (thermal conductivity) வெளிக்காட்டவல்ல சில்வர் காப்பர் டெல்லூரைட் (AgCuTe) கூட்டுச்சேர்மத்தை (Compound) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெங்களூரிலுள்ள நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தைச் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research -JNCASR) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இக்கூட்டுச் சேர்மத்தை கண்டுபிடித்துள்ளனர்.
வெப்ப-மின்னாற்றல் பண்புகளுடைய (Thermo-electric Properties) இந்த புதிய கூட்டுச் சேர்மம் வெள்ளி, தாமிரம் மற்றும் டெல்லூரியம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளது.
வீணான வேதியியல், வெப்ப அல்லது எஃகு மின் ஆலை வெப்ப ஆற்றலை மின்சாரமாக மாற்றக்கூடிய வெப்ப-மின்னாற்றல் பொருளாக (thermo-electric material) இக்கூட்டுச் சேர்மம் பயன்படுகின்றது.