TNPSC Thervupettagam
March 8 , 2018 2325 days 725 0
  • நல் மின்கடத்து திறனையும் (electrical conductivity), 24OC முதல் 425OC  வெப்பநிலையில் குறைவான வெப்ப கடத்து திறனையும் (thermal conductivity)  வெளிக்காட்டவல்ல  சில்வர் காப்பர் டெல்லூரைட் (AgCuTe) கூட்டுச்சேர்மத்தை (Compound) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • பெங்களூரிலுள்ள நவீன அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையத்தைச் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research -JNCASR) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இக்கூட்டுச் சேர்மத்தை கண்டுபிடித்துள்ளனர்.
  • வெப்ப-மின்னாற்றல் பண்புகளுடைய (Thermo-electric Properties) இந்த புதிய கூட்டுச் சேர்மம்  வெள்ளி, தாமிரம்  மற்றும் டெல்லூரியம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • வீணான வேதியியல், வெப்ப அல்லது எஃகு மின் ஆலை வெப்ப ஆற்றலை மின்சாரமாக மாற்றக்கூடிய வெப்ப-மின்னாற்றல் பொருளாக (thermo-electric material)   இக்கூட்டுச் சேர்மம் பயன்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்