தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையானது (TNSDA) சமீபத்தில், விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை அகழாய்வுத் தளத்தில் சுடுமண் பொம்மை ஒன்றினைக் கண்டெடுத்து உள்ளது.
இது கருப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட ஆண் உருவம் கொண்ட சுடுமண் பொம்மை ஆகும்.
இதில் தலையலங்காரமும் உதட்டுப் புன்னகையும் மெருகுற்று காணப்படுகின்றன.
அதன் கண்களும் அவற்றின் புருவங்களும் கயல் வடிவில் வரையப் பட்டிருக்கின்றன.
வெம்பக் கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழாய்வில் 800க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
இதில் டெரகோட்டா (கடுமட்பாண்டங்கள்) காலத்து மடல்கள், புகைபிடிக் குழாய், சுழல் பாரம், செப்பு நாணயம் மற்றும் கண்ணாடி மணிகள் ஆகியவை அடங்கும்.