TNPSC Thervupettagam

வெம்பக்கோட்டையில் 1,300 கலைப் பொருட்கள்

August 28 , 2024 87 days 159 0
  • விருதுநகர் மாவட்டத்தின் வெம்பக் கோட்டையில் மேற்கொள்ளப் பட்ட தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியில் 1,300க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.
  • இத்தளத்தில் ஒரு திமில் கொண்ட காளை பொறிக்கப்பட்ட சூது பவள மணிகளில் மேற் கொள்ளப் பட்ட உருசெதுக்கல் முத்திரையும் இங்கு கண்டறியப்பட்டது.
  • தமிழ்நாட்டில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது சூது பவள மணிகளால் ஆன உருசெதுக்கல் முத்திரை இதுவாகும்.
  • மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் காட்டுப்பன்றி பொறிக்கப்பட்ட இது போன்ற மற்றொரு பொருள் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • சூது பவள மணிகள் பொதுவாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் மட்டுமே காணப் படுகிறது என்ற நிலையில் உருசெதுக்கல் நுட்பம் ஆனது ரோம் நகரில் தோன்றியது.
  • கீழடி மற்றும் முசிறியில் கண்டறியப்பட்ட சூது பவள மணிகளில் மேற்கொள்ளப்பட்ட உருசெதுக்கல் நுட்பம் சங்க காலத்தினைச் சேர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்