தமிழக அரசின் தொல்லியல் துறையால் வெம்பக்கோட்டையில் நடந்த இரண்டாம் கட்ட அகழாய்வின் போது இரண்டு தங்கத் துண்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
இது விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் அருகே உள்ளது.
இங்கு 1.15 மீ முதல் 1.59 மீ வரையிலான ஆழத்தில் தங்கப் பொருள்கள் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.
இதில் ஒரு தங்கத் துண்டு கூம்பு வடிவத்திலும் மற்றொன்று செவ்வக வடிவத்திலும் கிடைத்துள்ளது.
இந்த இரண்டாம் கட்ட அகழாய்வின் போது தந்தத்தால் ஆன பகடை, டெரகோட்டா (களிமண்) புகைக்கும் குழாய், காதணி மற்றும் கல்லாலான எடைக் கல் ஆகியவையும் கண்டுடெக்கப் பட்டன.