TNPSC Thervupettagam

வெர்ஜின் மணி லண்டன் மாரத்தான் - 2019

May 3 , 2019 1906 days 603 0
  • இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற வெர்ஜின் மணி லண்டன் மாரத்தான் போட்டியில் இந்திய மாரத்தான் வீரரான நிதேந்திரா சிங் ராவத் 2 மணி நேரம் 15 நிமிடம் 59 வினாடிகளில் தூரத்தைக் கடந்து 27வது நபராக போட்டியை முடித்தார்.
  • இது இவரின் வாழ்நாள் பந்தயங்களில் 4வது வேகமான மற்றும் இந்த பருவத்தின் இரண்டாவது வேகமான பந்தயமாகும்.
  • 32 வயதான ராவத் செப்டம்பர் - அக்டோபரில் தோகாவில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
  • இந்த மாராத்தான் போட்டியில் தொடர்ந்து 4வது முறையாக கென்யாவைச் சேர்ந்த எலியுட் இப் சோஜ் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்