TNPSC Thervupettagam

வெளிநாடுகளில் இருந்து அதிகளவு பண வரவினைப் பெறும் நாடு - 2021

July 26 , 2022 725 days 360 0
  • அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரின் ஆரோக்கியம் பற்றிய முதல் உலக சுகாதார அமைப்பின் உலக அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையின்படி, உலகில் உள்ள எட்டு பேரில் ஒருவர் சுமார் ஒரு பில்லியன் எண்ணிக்கையினர் புலம்பெயர்ந்தோராக உள்ளனர்.
  • குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் பிரிவில் 87 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன், வெளிநாடுகளில் இருந்து அதிக பண வரவினைப் பெறும் நாடாக இந்தியா உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியா, சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் வெளிநாடுகளில் இருந்து அதிக பண வரவினைப் பெறும் நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
  • 2020 ஆம் ஆண்டில் பணம் வரவிற்கான மிகப்பெரிய மூல ஆதார நாடாக அமெரிக்கா இருந்தது.
  • அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்