TNPSC Thervupettagam

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 'பதிலி' வாக்கு முறை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

August 3 , 2017 2670 days 1699 0
  • வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தங்களுக்குப் பதிலாக வேறு ஒருவர் மூலம் தேர்தலில் வாக்களிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்பொழுது வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் எந்தத் தொகுதியில் பதிவு செய்துள்ளார்களோ அந்தத் தொகுதியில் மட்டும்தான் அவர்கள் வாக்களிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
  • இந்த மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் நடைமுறைக்கு வருவதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது உறவினர் மூலம் வாக்களிக்க முடியும்.
  • ராணுவ வீரர்களுக்கு மட்டுமே இச்சலுகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
  • இருந்தாலும் , ராணுவ வீரர்களுக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சலுகை வழங்கப்படவில்லை.
  • ராணுவ வீரர்களுக்கான சலுகையானது அவர்களின் உறவினர்களை நிரந்தரமாகவே தங்களுக்கு பதிலாக வாக்களிக்க நியமித்துக்கொள்ள இயலும். ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே பிரதிநிதியினை நியமிக்க இயலாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்