TNPSC Thervupettagam

வெளிநாட்டவர் வருகை எண்ணிக்கை

October 9 , 2022 781 days 409 0
  • வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியர் வருகை எண்ணிக்கையில் மாமல்லபுரம், தாஜ் மஹாலை விஞ்சி உள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, 2021-22 ஆம் ஆண்டில் மாமல்லபுரத்திற்கு 1,44,984 அளவில் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
  • ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், 38,922 வெளிநாட்டுப் பார்வையாளர்களுடன் இதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • மத்தியப் பட்டியலில் உள்ள முதல் 10 நினைவுச் சின்னங்களில் ஆறு தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.
  • தாஜ்மஹால், செங்கோட்டை மற்றும் குதுப்மினார் ஆகியவை 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவில் பார்வையாளர்கள் அதிகம் வருகை தந்த முதல் 3 தளங்கள் ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டில் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தந்த முதல் ஐந்து மாநிலங்களையும் இந்த அறிக்கைப் பட்டியலிட்டுள்ளது.
  • அவை தமிழ்நாடு (115.33 மில்லியன்), உத்தரப் பிரதேசம் (109.70 மில்லியன்), ஆந்திரப் பிரதேசம் (93.27 மில்லியன்), கர்நாடகா (81.33 மில்லியன்) மற்றும் மகாராஷ்டிரா (43.56 மில்லியன்) ஆகியனவாகும்.
  • நாட்டின் மொத்த உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையில், இந்த ஐந்து மாநிலங்கள் சுமார் 65.41 சதவிகித வருகையினைப் பதிவு செய்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்