வெளிநாட்டிலிருந்து குடும்பத்திற்குப் பணத்தை அனுப்புதலுக்கான சர்வதேச தினம் - ஜுன் 16
June 16 , 2019 1990 days 521 0
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 16 அன்று வெளிநாட்டிலிருந்து குடும்பத்திற்குப் பணத்தை அனுப்புதலுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகின்றது.
தங்களது தாய்நாட்டில் வாழும் அவர்களது 800 மில்லியன் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக 200 மில்லியன் சர்வதேச இடப்பெயர்வுத் தொழிலாளர்கள் அளிக்கும் பங்களிப்பினை இத்தினம் அங்கீகரிக்கின்றது.
இந்தத் தினத்தின் நோக்கம் இந்தப் பங்களிப்புகள் மில்லியன் கணக்கான குடும்பங்கள், சமூகங்கள், நாடுகள் மற்றும் ஒட்டுமொத்தப் பிராந்தியங்களின் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.