TNPSC Thervupettagam

வெளிநாட்டுச் சந்தையிலிருந்து கடன் வாங்குதல்

July 14 , 2019 1964 days 666 0
  • மத்திய அரசு, தனது மொத்தக் கடன் வாங்கலின் ஒரு பகுதியை வெளிநாட்டுச் சந்தையிலிருந்து வாங்க முடிவு செய்துள்ளது.
  • இதுவரை, இந்திய அரசு உள்ளூர் சந்தையில் மட்டுமே பத்திரங்களை வெளியிட்டு வந்தது.
  • இது தற்பொழுது வெளிநாட்டில் அரசின் உரிமை பெற்ற பத்திரங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
  • குறிப்பிட்ட கால வட்டி உத்தரவாதங்களைச் செலுத்துவதற்கான உறுதி மொழியுடன் அரசாங்கம் பத்திரங்களை வெளியிடுகின்றது. இந்திய அரசு அப்பத்திரங்களின் முதிர்வுத் தேதியில் பத்திரத்தின் முழு மதிப்பையும் திருப்பிச் செலுத்துகின்றது.
நன்மைகள்
  • வெளிநாட்டுச் சந்தையில் கடன் வாங்குதலானது வலிமையான ரூபாய்க்கு வழிவகுக்கும்.
  • அரசாங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் நேரத்தில் ஒரு வலிமையான ரூபாயானது இறக்குமதியை ஊக்கப்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்