TNPSC Thervupettagam

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை

October 4 , 2022 655 days 358 0
  • கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் அதன் விளைவாக கடுமையாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது 44.5% குறைந்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 2.74 மில்லியன் ஆக இருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கையானது,  2021 ஆம் ஆண்டில் 1.52 மில்லியனாக குறைந்தது.
  • வெளிநாடு வாழ் இந்தியர்களின் வருகையானது 2020 ஆம் ஆண்டினை விட 2021 ஆம் ஆண்டில் 52.6% அதிகரித்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 10.93 மில்லியன் ஆக இருந்தது.
  • 2021 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் முதல் 15 இடங்களில் இடம் பெற்ற நாடுகளுள் அமெரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம், கனடா, நேபாளம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கும்.
  • கடந்த ஆண்டில் இந்தியாவிற்கு வருகை வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 81% பேர் இந்த நாடுகளில் இருந்து வருகை தந்துள்ளனர்.
  • 87.5% வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமானப் பயணம் ஆனது மிகவும் விருப்பமிக்க பயண வசதியாக இருந்தது.
  • இந்திய நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மக்களின் எண்ணிக்கை என்பது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 7.29 மில்லியனாக இருந்த வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மக்களின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 7.3% அதிகரித்து, 8.55 மில்லியன் ஆக இருந்தது.
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து அமெரிக்கா, கத்தார், ஓமன் மற்றும் ஐக்கிய இராஜ்ஜியம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
  • இந்தியாவில் உள்நாட்டுச் சுற்றுலா 11.05% என்ற நிலையில் அதிகரித்ததுடன் சிறிய முன்னேற்றத்தினையும் இத்துறை கண்டது.
  • 2020 ஆம் ஆண்டில் 610.22 மில்லியனாக இருந்த  உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது 2021 ஆம் ஆண்டில் 677.33 மில்லியனாக இருந்தது.
  • இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் 2018-2019 ஆம் ஆண்டிற்கான தேசியச் சுற்றுலா விருதுகளில் முதலிடம் பிடித்தமைக்காக உத்தரகாண்ட், மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அந்த விருதுகளை வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்