TNPSC Thervupettagam

வெளிநாட்டு நிதி வரவு

April 2 , 2024 235 days 244 0
  • மார்ச் மாதத்தில் அதிக அந்நிய (வெளிநாட்டு) நிதி வரவினைப் பெற்றதன் மூலம் மற்ற ஆசிய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியது.
  • அந்நிய நிறுவன முதலீட்டு நிறுவனங்கள் (FIIs) 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து, அதிகப் பங்குகளை வாங்கி முதலீடு செய்ததன் மூலம் இந்தியப் பங்குகளில் 3.63 பில்லியன் டாலர்கள் வரவினை உருவாக்கியுள்ளன.
  • சந்தையில் சுமார் 52,467 கோடி ரூபாய் முதலீடு செய்து கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான நிதி வரவினை எட்டியதன் மூலம் உள்நாட்டு நிறுவனங்கள் ஆனது தொடர்ந்து நிகரப் பங்குகளை வாங்குபவையாக உள்ளன.
  • இந்தியாவைத் தவிர, தென் கொரியா, தைவான் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அந்நிய நிறுவன முதலீடுகளை மேற்கொள்வதற்கான இடங்களாக இருந்தன.
  • அதே சமயத்தில் ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் சந்தைகளில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டு நிறுவனங்கள் முதலீட்டினைத் திரும்பப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பினைத் தேர்ந்து எடுத்தன.
  • தென் கொரியா 2.91 பில்லியன் டாலர், தைவான் 1.14 பில்லியன் டாலர் மற்றும் இந்தோனேசியா 585 மில்லியன் டாலர் என்ற அளவில் நிதி வரவினைப் பெற்றுள்ளன.
  • ஜப்பான் நாட்டின் சந்தையில் இருந்து மிகப்பெரிய அளவில் 5.35 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அந்நிய நிறுவன முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • அதனைத் தொடர்ந்து தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளால் முறையே 1.13 பில்லியன் டாலர்கள் மற்றும் 514 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான அந்நிய நிறுவன முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • வியட்நாம் நாட்டின் அந்நிய நிறுவன முதலீடுகள் 197 மில்லியன் டாலரையும், பிலிப்பைன்ஸ் நாட்டின் அந்நிய நிறுவன முதலீடுகள் 40 மில்லியன் இழப்பினையும் எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்