TNPSC Thervupettagam

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2023

April 6 , 2023 598 days 340 0
  • ஒன்றிய வர்த்தக அமைச்சகம் ஆனது, 2023 ஆம் ஆண்டு புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையினை அறிவித்துள்ளது.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் சரக்கு ஏற்றுமதி மற்றும் 1 டிரில்லியன் டாலர் சேவைகள் ஏற்றுமதி என்ற ஒரு இலக்கை அடைவதற்கான துறை சார்ந்த சில இலக்குகளை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
  • இந்தப் புதியக் கொள்கையின்படி, ஃபரிதாபாத், மொராதாபாத், மிர்சாபூர் மற்றும் வாரணாசி ஆகியவை முறையே ஆடைகள், கைவினைப்பொருட்கள், கைவினைக் கம்பளம் மற்றும் தரைவிரிப்புகள் மற்றும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்களுக்கான சிறந்த ஏற்றுமதி நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்த வகையின் கீழ் தற்போதுள்ள 39 நகரங்களுடன் கூடுதலாக இவை அறிவிக்கப் பட்டுள்ளன.
  • இந்தப் புதியக் கொள்கையின் கீழ், பால் சார்ந்தத் தொழில்துறைக்கு, சராசரி ஏற்றுமதி விதிமுறையினைப் பின்பற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டளவில் 200-300 பில்லியன் டாலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிற நிலையில் இது இணைய வர்த்தக ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என்றும் நம்பப் படுகிறது.
  • இதன்படி கிடங்கு வசதியுடன் கூடிய ஒரு பிரத்தியேக மண்டலம் உருவாக்கப்படும்.
  • இது சிறப்பு இரசாயனங்கள், உயிரினங்கள், பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய SCOMET என்ற ஒரு கொள்கையை நெறிமுறைப் படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்