இந்தியாவில் உள்ள வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் வெளிநாட்டுச் சட்ட நிறுவனங்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறைக்கான விதிகளை இந்திய வழக்குரைஞர் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போது, வெளிநாட்டு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிறுவனங்கள் ஆனது வெளிநாட்டுச் சட்டம், சர்வதேசச் சட்டம், சர்வதேச நடுவம், கூட்டு முயற்சிகள், இணைப்புகள் மற்றும் கையகப் படுத்துதல், அறிவுசார் சொத்து விடயங்கள் போன்றவற்றைச் சரிநிகர் அடிப்படையில் நடைமுறைப் படுத்துகின்றன.
மேலும், எந்தவொரு வெளிநாட்டு வழக்கறிஞர் அல்லது சட்ட நிறுவனத்தையும் பதிவு செய்ய மறுப்பதற்கு இந்திய வழக்குரைஞர் சங்கத்திற்கு உரிமை உண்டு.
2018 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதியன்று, நீதிபதிகள் அடங்கிய பிரிவு அமர்வு ஆனது, வெளிநாட்டுச் சட்ட நிறுவனங்களோ அல்லது வெளிநாட்டு வழக்கறிஞர்களோ இந்தியாவில் வழக்காடல் சார்ந்த அல்லது வழக்காடல் சாராதப் பணிகளை ஆற்ற முடியாது என்று தீர்ப்பளித்தது.
இருப்பினும், வெளிநாட்டுச் சட்ட நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு வழக்கறிஞர்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்கு தற்காலிகமாக இந்தியாவிற்கு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.
இந்திய வழக்குரைஞர் சங்கம் என்பது இந்தியாவில் வழக்காடல் நடைமுறையை நிர்வகிக்கின்ற ஒரு சட்டப்பூர்வ அமைப்பு ஆகும்.