TNPSC Thervupettagam

வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த புதிய குழு

June 16 , 2018 2228 days 635 0
  • முன்னாள் தலைமை புள்ளியிலாளர் பேராசிரியர் C.A.ஆனந்த் தலைமையில் மத்திய அரசு வேலை வாய்ப்பு சார்ந்த தகவல்களை வெளியிடுவதில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த புதிய குழுவை உருவாக்கியுள்ளது.
  • தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு சம்பந்தமான துறையில் இரண்டு பெரிய கணக்கெடுப்புகளை தயார் செய்கின்றது. அவை வருடாந்திர வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை பற்றிய கணக்கெடுப்பு மற்றும் காலாண்டிற்கான வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு.
  • வருடாந்திர வேலை வாய்ப்பு வேலை வாய்ப்பின்மை பற்றிய கணக்கெடுப்பு பிற்பாடு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் தொழிலாளர் நிலை பற்றிய குறித்த கால அளவிலான கணக்கெடுப்பால் (Periodic Labour Force Survey - PLFS) மாற்றப்பட்டது.
  • இந்த அறிக்கை (PLFS) ஊரகப் பகுதியில் வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்பின்மை பற்றிய வருடாந்திர தகவல்களை கொண்டிருப்பதோடு நகரப்பகுதியில் வேலைவாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை பற்றிய காலாண்டுத் தகவல்களையும் மிகப்பெரிய மாதிரி அளவுகளின் அடிப்படையில் கொண்டிருக்கும்.
  • இது தவிர தொழிலாளர் சேம நல நிதி அமைப்பும் மாதாந்திர ஊதியத் தரவுத் தகவல்களை வெளியிட ஆரம்பித்திருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்