TNPSC Thervupettagam

வெளிப்புற வேலை மற்றும் தோல் புற்றுநோய்

November 16 , 2023 374 days 241 0
  • மெலனோமா (கருநிறமிப் புற்றுநோய்) அல்லாத தோல் புற்றுநோயால் ஏற்படுகின்ற ஒவ்வொரு மூன்றில் ஒரு மரணம் சூரிய ஒளி நேரடியாக படுமாறு வெளிப்புறப் பகுதியில் வேலை செய்வதால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
  • உலக சுகாதார அமைப்பு ஆனது, சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் (ILO) இணைந்து தயாரித்த ஒரு கூட்டு அறிக்கையில் இது குறித்து எச்சரித்துள்ளது.
  • மெலனோமா அல்லாத தோல் புற்றுநோய் என்பது “தோலின் மேல் அடுக்குகளில் உருவாகும் புற்றுநோய் வகையைக் குறிக்கிறது.
  • இந்தப் புற்றுநோயின் இரண்டு முக்கிய துணை வகைகள் ஆனது, அடியணுப் புற்று நோய் மற்றும் செதிட்கலப் புற்றுநோய் ஆகியனவாகும்.
  • இந்த அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில், உழைக்கும் வயதுப் பிரிவினைச் சேர்ந்த உலக மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர் வெளியில் வெளிப்புறப் பகுதியில் வேலை செய்யும் போது சூரியனின் புற ஊதா கதிர்வீச்சுக்கு ஆளாகியுள்ளனர்.
  • 2019 ஆம் ஆண்டில் 183 நாடுகளில் சுமார் 19,000 பேர் மெலனோமா அல்லாத தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதனால் ஏற்பட்ட இறப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட நபர்களில் சுமார் 65 சதவீதம் பேர் ஆண்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்