அணி சேரா இயக்கத்தின் (Non-Aligned Movement) அமைச்சரவை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அஸர்பேஜானின் தலைநகரமான பாகு நகரத்திற்கு 3 நாட்கள் அலுவல்பூர்வ சந்திப்பை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கியுள்ளார்.
அணி சேரா இயக்கத்தின் இடைக்கால அமைச்சரவை மாநாடு ஏப்ரல் 5-6 தேதிகளில் பாகு நகரத்தில் “நீடித்த வளர்ச்சிக்கான பாதுகாப்பு மற்றும் சர்வதேச அமைதியை ஊக்குவித்தல்” என்ற கருத்துருவின் அடிப்படையில் நடைபெற்றது.
அணி சேரா இயக்கம் என்பது எந்த ஒரு சக்தி வாய்ந்த பெரிய குழுவிலும் முறையாக சேராமல் உள்ள நாடுகளின் குழு ஆகும். 2012ம் ஆண்டு வரை இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
17 நாடுகள் மற்றும் 10 சர்வதேச அமைப்புகள் இதில் பார்வையாளர்களாக உள்ளன. இந்த அமைப்பு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றி வருகிறது.
2011ம் ஆண்டு பாலியில் (இந்தோனேசியா) 16வது அமைச்சரவை மாநாட்டில் அஸர்பேஜான் குடியரசு இந்த அமைப்பில் சேர்ந்து கொண்டது.
2019ம் ஆண்டு அஸர்பேஜான் குடியரசு அணி சேரா இயக்கத்தின் 18வது மாநாட்டை நடத்துவதோடு 2019 முதல் 2022 வரையிலான கால கட்டத்திற்கு இந்த அமைப்பின் தலைவராகவும் இருக்கும்.