TNPSC Thervupettagam

வெளியேற்ற விசா

April 28 , 2019 1944 days 539 0
  • ஐக்கிய நாடுகளின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பானது 2019-ஆம் ஆண்டின் இறுதியில் அனைத்து அயல்நாட்டுப் பணியாளர்களுக்கான மிகவும் விமர்சனத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் வெளியேற்ற விசா அமைப்பை கத்தார் ஒழிக்கவிருக்கிறது என்று அறிவித்துள்ளது.
  • 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கத்தார் சட்ட மன்றமானது ”கப்லா” அல்லது ”நிதி ஆதரவுத் திட்டத்தை” ஒழிப்பதற்காக ஒப்புதல் வழங்கியது.
  • கப்லா என்பது அயல்நாட்டுப் பணியாளர்கள் பணியிலிருந்து மாறுவதற்கோ, ஒரு நாட்டிற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ தங்கள் மேலதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.
  • 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறுவதை நினைவில் வைத்து தொழிலாளர் சீர்திருத்தங்கள் அங்கு மேற்கொள்ளப் படுகின்றன.
  • கத்தார் நாடு 2022-ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை நடத்த இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்