மகாராஷ்டிராவின் மாநில வேளாண்மை சந்தைப்படுத்துதல் வாரியமானது (Maharashtra State Agricultural Marketing Board - MSAMB) பாதி அழியக்கூடிய பொருட்களின் வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக தனது மாநிலத்தின் பிரதிநிதிகளாக 6 பேரை வெளி மாநிலங்களில் நியமித்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் வெளி மாநிலங்களில் பிரதிநிதிகளை நியமிக்கும் முதல் சந்தைப்படுத்தும் வாரியமாக MSAMB ஆகியுள்ளது.
இந்த வர்த்தகப் பிரதிநிதிகள் பொருத்தமான சந்தைத் தகவல்களைச் சேகரிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த மாநிலம் முழுவதிலும் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகளையும் அளிப்பர்.