வெள்ளலூர் ஏரியைச் சுற்றியமைந்த உள்ளூர் வகை மரங்கள் மற்றும் பூக்களைக் கொண்ட ஒரு பசுமை மண்டலமானது அந்த ஏரியை ஒரு வண்ணத்துப் பூச்சிகளின் உறைவிடமாக மாற்றியுள்ளது.
இந்த ஏரி கோயம்பத்தூரில் அமைந்துள்ளது.
‘நீல அழகி’ (Blue Mormons) என்றழைக்கப்படும் வண்ணத்துப் பூச்சிகளே இங்கு அதிக அளவில் காணப்படுகின்றன.
இது இந்தியாவின் 4வது மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சியாக உள்ளதோடு இது மகாராஷ்டிராவின் மாநில வண்ணத்துப்பூச்சியாகும்.