ஒரு புதியப் பகுப்பாய்வு ஆனது, வெள்ளிக் கோளின் மேற்பரப்பில் எரிமலை சார்ந்த நிகழ்வுகள் சமீபத்தில் நிகழ்ந்ததற்கான சில நேரடிப் புவியியல் ஆதாரங்களை முதல் முறையாகக் கண்டறிந்துள்ளது.
ஒரு எரிமலைப் புழையானது, சுமார் எட்டு மாதங்களாக அதன் வடிவத்தை மாற்றி அளவில் பெரிதாகி வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலப்பரப்பு மாற்றங்கள் ஆனது, மாகெல்லன் என்ற ஆய்வுப் பயணத்தின் போது வெள்ளிக் கோளில் உள்ள எரிமலையில் காணப்பட்டன.
1990 முதல் 1992 ஆம் ஆண்டு வரை, மாகெல்லன் விண்கலம் (17) ஆனது புவி மேற் பரப்பினைத் துல்லியமாகப் படம் பிடிக்கும் ரேடாரினை (SAR) பயன்படுத்தி வெள்ளிக் கோளின் மேற்பரப்பைப் படம் பிடித்தது.