TNPSC Thervupettagam

வெள்ளிக் கோளின் வளிமண்டலக் கட்டமைப்பு

November 13 , 2023 250 days 179 0
  • பூமியின் அண்டை கோளான வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் அணு நிலை ஆக்ஸிஜன்  இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • SOFIA வான்வழி கண்காணிப்புக் கருவியைப் பயன்படுத்தி இந்தக் கண்டறிதல் மேற் கொள்ளப் பட்டது.
  • வெள்ளிக் கோள் ஆனது பூமியைப் போலன்றி, கார்பன் டை ஆக்சைடு (96.5%) அதிகம் காணப்படுகின்ற தடிமனான மற்றும் அழிவுகரமான வளிமண்டல அமைப்பினைக் கொண்டுள்ளது.
  • இங்குக் கண்டறியப்பட்ட இந்த அணு நிலை ஆக்ஸிஜன், ஒற்றை ஆக்ஸிஜன் அணுவைக் கொண்டுள்ளது. இது இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்டுள்ள மற்றும் சுவாசிக்கக் கூடிய மூலக்கூறு ஆக்ஸிஜனில் இருந்து வேறுபட்டுள்ளது.
  • மேற்பரப்பில் இருந்து சுமார் 60 மைல் (100 கிமீ) உயரத்தில், வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தின் இரண்டு அடுக்குகளுக்கு இடையே ஆக்ஸிஜன் செறிவு மிகுந்து காணப்படுகிறது.
  • ஆக்சிஜனின் வெப்பநிலையானது அந்தக் கோளின் ஒளி பெறும் (பகல்) பக்கத்தில் -184 டிகிரி பாரன்ஹீட் (- 120 டிகிரி செல்சியஸ்) ஆகவும், அதன் ஒளி பெறா (இரவு) பக்கத்தில் -256 டிகிரி பாரன்ஹீட் (- 160 டிகிரி செல்சியஸ்) ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்