TNPSC Thervupettagam

வெள்ளிக் கோளுக்கான இஸ்ரோவின் திட்டம்

May 8 , 2022 937 days 546 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது வெள்ளிக் கோளின் மேற்பரப்பிற்கு கீழே உள்ள கூறுகளைப் பற்றி ஆய்வு செய்வதற்காக ஒரு விண்கலத்தை அனுப்ப உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இஸ்ரோ இந்த விண்கலத்தினை அனுப்ப உள்ளது.
  • அதற்கடுத்து ஒரு வருடத்திற்குப் பிறகு, அதனைச் சுற்றும் விண்கலப் பணியைத் தொடங்க அது திட்டமிட்டுள்ளது.
  • சுற்றும் விண்கலப் பணி என்பது விண்கலத்தின் சுற்றுப்பாதையை மாற்றுவதற்கு உந்து விசை அமைப்புகளைப் பயன்படுத்துவதாகும்.
  • இது ஒரு விண்கலத்தை ஒரு கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழையச் செய்கிறது.
  • சல்பூரிக் அமிலத்தின் மேகங்கள் இந்தக் கிரகத்தை மூடியுள்ளதால், நச்சுத்தன்மையும் அரிக்கும் தன்மையும் கொண்ட வெள்ளியின் வளிமண்டலத்தைப் பற்றி ஆராய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்