வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 76ம் ஆண்ட விழா - ஆகஸ்ட் 08
August 13 , 2018 2295 days 1902 0
2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி இந்தியாவின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 76வது ஆண்டு விழா ஆகும்.
1942ம் ஆண்டு இந்த நாளில் மகாத்மா காந்தி (தேசத் தந்தை) இந்தியாவிலிருந்து வெள்ளையர்களை வெளியேற்றுவதற்காக எல்லா இந்தியர்களுக்கும் ‘செய் அல்லது செத்து மடி‘என்ற சொற்பொழிவாற்றி அழைப்பு விடுத்தார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் (பாரத் சோடோ அந்தோலன் அல்லது ஆகஸ்ட் இயக்கம் அல்லது ஆகஸ்ட் கிராந்தி) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஒரு மிக முக்கியமான மைல்கல் ஆகும்.
ஆகஸ்ட் 8, 1942 அன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC)ன் பாம்பே கூட்டத் தொடரில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்று சிவில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது.