TNPSC Thervupettagam

வெள்ளையனே வெளியேறு தினம் – ஆகஸ்ட் 09

August 9 , 2020 1510 days 486 0
  • பாரத் சோடோ அந்தோலன் அல்லது ஆகஸ்ட் கிராந்தி இயக்கமானது 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 அன்று அகில இந்திய காங்கிரஸ் குழுவின் (AICC - All India Congress Committee) பம்பாய் அமர்வில் தொடங்கப்பட்டது.
  • இந்த இயக்கமானது 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 அன்று குவாலியன் நீர்த்தொட்டி மைதானப் பகுதியில் தொடங்கப்பட்டது.
  • இது ஆகஸ்ட் கிராந்தி மைதானம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இத்தினத்தில் ஆங்கிலேயர்கள் வெளியேறுவதற்கான ஒரு இறுதிக் கட்டப் போராட்டத்திற்கு வேண்டி மகாத்மா காந்தி இந்திய மக்களுக்குசெய் அல்லது செத்து மடிஎன்ற முழக்கத்தை வழங்கினார்.
  • இந்த இயக்கத்தின் முதல் பாதியானது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுடன் அமைதியான முறையில் நடைபெற்றது.
  • ஆனால் இந்த இயக்கத்தின் 2வது பாதியானது வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அரசுக் கட்டிடங்கள் & இரயில் நிலையங்கள் ஆகியவற்றிற்குத் தீ வைத்தல் போன்ற வன்முறைச் சம்பவங்களுடன் நடத்தப் பட்டது.
  • முக்கியத் தலைவர்களின் கைதுக்குப் பின்னர், இளம் வயது தலைவர் அருணா ஆசப் அலி அவர்கள் AICC அமர்விற்குத் தலைமை தாங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்