TNPSC Thervupettagam

வெள்ளை அறிக்கை – தமிழகப் பொருளாதாரம்

August 13 , 2021 1107 days 603 0
  • தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன் சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையினை வெளியிட்டார்.
  • தமிழகத்தில்  கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் குறித்து இந்த வெள்ளை அறிக்கை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது.
  • தமிழகத்தில் 2006-11 ஆகிய ஆண்டுகளில் 10.15% ஆக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வருடாந்திர வளர்ச்சி வீதமானது 2016-20 ஆகிய ஆண்டுகளில் 7.22% ஆகக் குறைந்துள்ளது என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் வருவாய்ப் பற்றாக்குறை மோசமாகி வருகிறது.
  • 2020-21 ஆம் நிதியாண்டிற்கான வருவாய்ப் பற்றாக் குறையானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.16% ஆகும்.
  • அரசுக் கடன்கள் அதிகரித்து வருவதால் மாநிலத்தின் நிதிப்பற்றாக் குறையானது பிரதானமாக அதிகரித்து வருகிறது.
  • நிதிப் பற்றாக்குறையானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4.43% ஆக உள்ளது.
  • தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பேரிலும் 2,63,976 ரூபாய் பொதுக் கடன் உள்ளது.
  • பொதுக் கடனானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 26.69% ஆகும்.
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் கணிசமான அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் மானியங்களானது வருவாய்ச் செலவினத்தில் 27.06% ஆகவும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.21% ஆகவும் உயர்ந்துள்ளது.
  • மின்சாரத்திற்கான மானியமானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் அதிக பட்சமாக 1.10% ஆக உள்ளது.
  • உணவு மானியமானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.49% ஆக உள்ளது.
  • போக்குவரத்து மீதான மானியமானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.19% ஆக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்