IBM நிறுவனம் மற்றும் எரிசக்தி துறையின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகமானது (Oak Ridge National Laboratory) Summit supercomputing machine எனும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் விவேகமுடைய அறிவியல்பூர்வ மீத்திறன் கணினியை (Super computer) வெளிக்காட்டியுள்ளது.
இந்த சம்மிட் மீத்திறன் கணினியின் வேகமானது, சீனாவின் உயர் தரவரிசையுடைய முன்னணி மீத்திறன் கணினியான சன்வே தைஹீ லைட் (Sunway Taihu Light) கணினியின் உச்ச செயல்பாடுகளைக் காட்டிலும் இருமடங்காகும்.
இதன்மூலம் நடப்பு 5 ஆண்டுகளில் முதல் முறையாக இனி உலகின் வேகமான மீத்திறன் கணினி சீனாவிற்கு சொந்தமானது கிடையாது.
சம்மிட் மீத்திறன் கணினி இயந்திரமானது நொடிக்கு 200 குவாட்ரில்லியன் (quadrillion-அதாவது 200-ஐத் தொடர்ந்த 15 பூஜ்ஜியங்கள்) கணக்குகளைத் தீர்க்கவல்ல உச்ச செயல்பாட்டை வழங்கவல்லதாகும்.
இது 200 பெட்டா பிளாப்புகளை (petaflops) பயன்படுத்துகின்றது அல்லது மீத்திறன் கணினிகளை மதிப்பிடப் பயன்படும் நிலையான அளவைப் பயன்படுத்துகின்றது.