TNPSC Thervupettagam
October 5 , 2017 2608 days 891 0
  • ஜாக்குவஸ் குபோஷே, ஜோசிம் ஃபிராங்க், ரிச்சர்ட் ஹெண்டர்ஸன் ஆகிய மூவருக்கு நடப்பாண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • ஜிகா வைரஸ், அல்சைமர் எனும் மூளை நோய் போன்றவற்றை உருவாக்கும் நொதியங்களின் செயல்பாட்டை துல்லியமாக கண்டறிய உதவும் கிரையோ–எலக்ட்ரான் நுண்ணோக்கியை உருவாக்கியமைக்காக இந்த நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இதுவரை செல்களின் மிக நுண்ணிய மூலக்கூறுகளின் செயல்பாட்டை அறிய செல்களின் மேல் எலக்ட்ரானை பாய்ச்சி ஆய்வு செய்யும் டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி முறையும், செல் உறுப்புகளை படிமங்களாக மாற்றி ஆய்வு செய்யும் எக்ஸ்ரே-கிரிஸ்டரோகிராபி முறையும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
  • செல்கள் இயக்கத்தில் இருக்கும் போது இவற்றால் மூலக்கூறு செயல்பாடுகளை ஆராய்வது மிகவும் கடினம்.
  • இதனால் இம்மூவரும் கிரையோ-எலக்ட்ரான் நுண்ணோக்கி முறையை உருவாக்கியுள்ளனர்.
  • முப்பரிமாண பதிவு ( 3D IMAGING) முறையை அடிப்படைக் கொள்கையாக கொண்டு இந்த கிரையோ – எலக்ட்ரான் நுண்ணோக்கி செயல்படும்.
  • இதன் குளிர்விப்பு முறை அல்லது அதிஉணர்வு பதிவு (Ultra Sensitive Imaging) முறையில் இயக்கத்திலுள்ள செல்கள் (கிரையோ) குளிர்நிலைக்கு (-1500C) கொண்டுவரப்பட்டு, செல்லின் நுண்ணிய பாகங்கள் உறையவைக்கப்பட்டு அவற்றின் அமைப்புகள் முப்பரிமாண முறையில் பதிவு செய்யப்படுகின்றன. இம்முறையில் நுண்ணோக்கு மை (Microscopic Strain Dye) எவையும் பயன்படுத்தப்படுத்த தேவை இல்லை.
  • இக்கண்டுபிடிப்பானது உயிரிவேதியியல் துறைக்கும், மருந்து தயாரிப்பு துறைக்கும் ஸிகா மற்றும் அல்சைமர் போன்ற நோய்களுக்கு எதிரான மருந்துகளை கண்டறிய உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்