TNPSC Thervupettagam

வேர்ப் பாலம்

November 24 , 2019 1703 days 674 0
  • மேகாலயாவின் காசி மற்றும் ஜெயிந்தியா ஆகிய மலைகளில் உள்ள ‘வேர்ப் பாலங்கள்’ குறித்து ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
  • நவீன கட்டிடக் கலைகளில் இவற்றை ஒருங்கிணைப்பதற்காக இந்த ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது நகரங்களை அதிக சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வைத்திருக்க உதவும்.
  • ஃபைக்கஸ் எலாஸ்டிகா (இந்தியா ரப்பர்) லிருந்து வளரும் இளம் நெகிழ்வான, காற்றில் உலவும் வேர்களானது பனை மரத்தின் ஒரு இனமான அரேகா கேடெச்சு மரத்தின் தண்டு அல்லது பூர்வீக மூங்கிலின் அடிப் பகுதியில் வைக்கப்படுகின்றன.
  • காலப் போக்கில், காற்றில் உலவும் வேர்களின் வலிமை மற்றும் தடிமன் அதிகரிக்கும். பின்னர் அர்கா அல்லது மூங்கில் அவற்றிற்கு தேவையில்லை.
  • ஜிங் கீங் ஜ்ரி அல்லது வேர்ப் பாலங்களானது நீரோடைகள் மற்றும் ஆறுகளை கடப்பதற்காக மேகாலயாவில் பல தலைமுறைகளாக பயன்படுத்தப்படுகின்றன.
  • மேலும் இவை உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக மாறியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்