வானியலாளர்கள் முதன்முறையாக K2-18b எனப்படும் ஒரு தொலைதூரக் கிரகத்தின் வளிமண்டலத்தில் “நீராவியைக்” கண்டுபிடித்துள்ளனர்.
நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியின் தரவு இந்தக் கண்டுபிடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது.
K2-18b ஆனது வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது. மேலும் அக்கிரகத்தில் தண்ணீரும் உள்ளது. இதனால் மனிதர்கள் வாழ்வதற்கு உகந்த நீர் மற்றும் வெப்பநிலை ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும் ஒரேயொரு வெளிக்கோள் இதுவாகும்.
இது பால்வீதியின் லியோ விண்மீன் மண்டலத்தில் பூமியிலிருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருகின்றது.
இது பூமியின் நிறையை விட 8 மடங்கு நிறை கொண்டது. இது பூமியை விட இரண்டு மடங்கு பெரியது.
இது பூமி மற்றும் நெப்டியூன் ஆகியவற்றின் நிறைகளுக்கிடையேயான வெளிக் கோள்கள் அல்லது சூப்பர் எர்த் என்று அழைக்கப்படுகின்றது.