ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியானது, தீவிரமான முறையில் உருவாகி வரும் ஒரு ஜோடி நட்சத்திரங்களைப் பற்றிய தனித்துவமானத் தகவல்களை வழங்கி உள்ளது.
இந்த இளம் இணை நட்சத்திரங்களுக்கு ஹெர்பிக்-ஹாரோ 46/47 என்று பெயரிடப் பட்டு உள்ளது.
இது பூமியிலிருந்து 1,470 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்த வேலா என்ற விண்மீன் திரளில் அமைந்துள்ளது.
காலப்போக்கில் ஒரு நட்சத்திரம் எவ்வளவு நிறையினைப் பெறுகின்றன என்பதைப் பற்றியத் தகவலை இது வழங்கும்.
இது சூரியனின் மாதிரியை உருவாக்கச் செய்வதற்கும், ஒப்பீட்டளவில் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரம் மற்றும் சூரியக் குடும்பம் எவ்வாறு உருவானது என்பதை ஆராயச் செய்வதற்கும் உதவும்.