ஜூலை 12 அன்று 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீருடன் இரயில் சென்னையை வந்தடைந்தது.
இந்த இரயில் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 கலன்களைக் கொண்டது.
தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார் பேட்டையில் இந்த தண்ணீர் நிரப்பப்பட்டது.
வேலூரின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு நீர் வழங்கப் படுவதிலிருந்து உபரிநீர் சென்னைக்குத் திருப்பி விடப்படுகின்றது.
18 ஆண்டுகளில் முதன்முறையாக மற்ற இடங்களிலிருந்துத் தலைநகருக்கு இரயில் தொட்டிகளில் தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது.