TNPSC Thervupettagam

வேலூரில் விமான நிலைய வளாக கட்டமைப்பு பணிகள்

August 11 , 2023 473 days 239 0
  • வேலூரில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் (NH 44) பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலைய வளாகத்தின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
  • பொது விமானப் போக்குவரத்தின் தலைமை இயக்குநரகத்தின் பாதுகாப்புத் தணிக்கை முடிந்த பிறகு நவம்பர் மாதத்திற்குள் இது தனது செயல்பாடுகளைத் தொடங்கும்.
  • வேலூரில் உள்ள புதிய ஓடுபாதையில் நவம்பர் மாதம் முதல் சிறிய விமானங்களை இயக்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
  • வேலூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு, UDAN – பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (UDAN-RCS) இரண்டாம் கட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்னதாக அனுமதி வழங்கப்பட்டது.
  • UDAN திட்டமானது, சிறிய நகரங்களில் விமானச் சேவை இணைப்பை மேம்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புதிய விமான நிலையமானது ஆம்பூர், ஆற்காடு, வாணியம்பாடி, வேலூர் போன்ற பகுதிகளில் உள்ள உள்ளூர் பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்