தி.மு.க வேட்பாளரின் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அதிக அளவிலான நிதியைப் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து வேலூர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தல் இரத்து செய்யப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையமானது (EC - Election Commission) அந்தத் தொகுதிக்கானத் தேர்தலை இரத்து செய்வதற்கானப் பரிந்துரையை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அளித்தது.
ECI ஆனது பின்வரும் அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்தொகுதிக்கான தேர்தலை இரத்து செய்துள்ளது.
அரசியலமைப்பின் ஷரத்து 324
1897-வது சட்டக்கூறின் 21-வது பிரிவு
நியாயமான மற்றும் நேர்மையான தேர்தலை நடத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள பிற அதிகாரங்கள்
சட்ட விரோதப் பணப்புழக்கம் காரணமாக தேர்தல் இரத்து செய்யப்பட்ட முதலாவது மக்களவைத் தொகுதியாக வேலூர் தொகுதி உருவெடுத்துள்ளது.