TNPSC Thervupettagam

வேலைவாய்ப்பின்மை விகிதம்

January 10 , 2021 1289 days 920 0
  • இது இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்திடமிருந்து பெற்ற ஒரு தரவாகும்.
  • இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 9.06% ஆக இருக்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதமானது நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதத்தை விட அதிகமாக இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
  • இந்தியாவானது கொரானா பொது முடக்கத் தாக்கத்தின் காரணமாக 2020 ஆம் ஆண்டில் ஏப்ரல் (23.5%) முதல் ஜுன் (10.18%) வரையில் மிக அதிக அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதத்தைக் கண்டுள்ளது.
  • மாநிலங்களைப் பொறுத்த வரையில், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஹரியானா (32.5%) மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மிக அதிக அளவிலான  வேலைவாய்ப்பின்மை விகிதத்தையும் ஒடிசா (0.2%) மற்றும் தமிழ்நாடு (0.5%) ஆகிய மாநிலங்கள் மிகக் குறைந்த அளவிலான வேலைவாய்ப்பின்மை விகிதத்தையும் கண்டுள்ளன.
  • தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 0.5% என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.
  • தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது பொது முடக்கத் தளர்வுகள் குறித்த  வழிகாட்டுதல்களுடன் ஒரு நேரடித் தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது.
  • ஏப்ரல் மாதத்தில் முழுப் பொது முடக்கத்தின் போது, தமிழ்நாட்டின் வேலை வாய்ப்பின்மை விகிதமானது 49.8% ஆக இருந்தது.
  • இது அந்தக் காலகட்டத்தில் தேசிய வேலைவாய்ப்பின்மை விகிதமான 23.5% என்ற அளவை விட அதிகமாக இருந்தது.
  • தமிழ்நாடானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 41 மில்லியன் மனித நபர்களுக்கான பணி நாட்கள் என்ற அளவில் அதிக வேலைவாய்ப்பைக் கொண்டு இருந்தது, இது மற்ற மாநிலங்களிடையே மிகவும் அதிகமாகவும் கடந்த ஆண்டை விட 151% அதிகரிப்பையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்