வேலைவாய்ப்பு தொடர்பான செயல்பாடுகளில் செலவிடப்படும் நேரம்
February 26 , 2025 6 days 77 0
இந்தியர்கள் ஏற்கனவே ஒரு நாளைக்கு எனச் சராசரியாக 422 நிமிடங்கள் - வாரத்திற்கு சுமார் 42 மணிநேரம் – ஊதியம் பெறும் வேலைவாய்ப்பில் செலவிடுகிறார்கள்.
இதில் நகர்ப்புறத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 469 நிமிடங்கள் (7.8 மணிநேரம்) செலவிடுகிறார்கள் என்ற நிலையில் கிராமப்புறத் தொழிலாளர்களில் சராசரியாக 399 நிமிடங்கள் (6.65 மணிநேரம்) ஆக உள்ளது.
டாமன் & டையூ மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி போன்ற ஒன்றியப் பிரதேசங்களின் மக்கள் தினசரி வேலைகளில் 600 நிமிடங்களுக்கு மேல் ஈடுபடுகின்றனர்.
இதற்கு நேர்மாறாக, கோவா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மிகச் சராசரியாக 360 நிமிடங்களுக்கும் குறைவாகவும் டெல்லி 8.3 மணிநேரமும், கோவா 5.5 மணிநேரமும் மட்டுமே செலவிடுகின்றன.
நகர்ப்புறப் பெண்கள் ஆண்களை விட தினமும் இரண்டு மணி நேரம் குறைவாக வேலை செய்கிறார்கள் அதே நேரத்தில் கிராமப்புற பெண்கள் ஆண்களை விட 1.8 மணி நேரம் குறைவாக வேலை செய்கிறார்கள்.
வேலை நேரத்தில் சுமார் 1% அதிகரிப்பு ஆனது, தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியில் (NSDP) பதிவான 1.7% அதிகரிப்புடன் தொடர்பு கொண்டுள்ளது.
பெரிய மாநிலங்களுக்கு, இந்த தாக்கம் ஆனது இன்னும் வலுவானது, அதாவது வேலை நேரங்களின் ஒவ்வொரு 1% அதிகரிப்புக்கும் 3.7% நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு பதிவாகிறது.
தற்போது, குஜராத் ஆனது வாரத்திற்கு சுமார் 70 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்கின்ற மிகவும் அதிகபட்ச மக்கள் தொகை விகிதத்தினை (7.21%) கொண்டுள்ளது என்ற ஒரு நிலையில் இது பீகாரில் வெறும் 1.05% ஆக மட்டுமே உள்ளது.