வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதி - நிதி ஆயோக்கின் சிறப்பு நிபுணர் குழு
September 7 , 2017 2636 days 846 0
நிதி ஆயோக் அமைப்பு நாட்டில் ஏற்றுமதியை அதிகப்படுத்தி வேலைவாய்ப்பிற்கு பெரிய ஊக்கத்தை ஏற்படுத்த வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிக்கான சிறப்பு நிபுணர் குழுவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிபுணர் குழுவின் தலைவராக நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக உள்ள டாக்டர் ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியத் தொழிலாளர்கள் உயர்ந்த திறமைகளைக் கொண்டிருந்த போதிலும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் இன்னமும் குறைந்த உற்பத்தித் திறனில், குறைந்த சம்பளத்தில் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளிலும் சுய தொழில் அமைப்புகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு அவசரகால மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய முறையான அமைப்பு இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை மற்றும் குறைந்த வேலைவாய்ப்பு பிரச்சினைகளுக்கு தேவையான முக்கியமானத் தீர்வாகும்.
இந்த நிபுணர் குழு நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி, இந்திய வர்த்தகத் துறையின் செயலாளர், இந்திய தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளர், இந்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர், இந்திய ஜவுளித்துறையின் செயலாளர் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.