தமிழ்நாடு சட்டசபையானது, 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தில் ஒரு திருத்தத்தினை நிறைவேற்றியது.
அந்தச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அதிகபட்ச வேலை நேரம், விடுமுறை நாட்கள் மற்றும் கூடுதல் பணி நேரத்திற்கான ஊதியம் ஆகியவற்றுடன் தொடர்புடைய தற்போதைய விதிமுறைகளிலிருந்துத் தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழிலாளர்கள் தற்போது 12 மணி நேர தினசரி வேலை நேர மாற்றத்தில் வேலை செய்வதற்கான விருப்பத் தேர்வினை தேர்வு செய்யலாம் என்பதோடு, மேலும் அவர்களுக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறையுடன் கூடிய நான்கு நாட்கள் அளவிலான வேலை நாட்களும் வழங்கப்படும்.
இந்த மசோதாவானது, வேலை நேர வரம்புகள் தொடர்பான விதிகளை உள்ளடக்கிய 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் ஏதேனும் அல்லது அனைத்து விதிகளிலிருந்தும் எந்தவொருத் தொழிற்சாலை அல்லது குழு அல்லது தொழிற்சாலை குழுவிற்கு விலக்கு அளிப்பதற்கான அதிகாரத்தினை மாநில அரசுக்கு அளிக்கிறது.
இதில் சில சட்டப் பிரிவுகள்: 51 (வாராந்திர வேலை நேரம்), 52 (வாராந்திர விடுமுறைகள்), 54 (தினசரி வேலை நேரம்), 55 (ஓய்வெடுப்பதற்கான இடைவெளிகள்), 56 (நேர ஏற்பமைவு) அல்லது 59 (ஒன்றுடன் ஒன்று இணையும் வகையிலான வேலை நேர பரிமாற்றத்திற்குத் தடை).