TNPSC Thervupettagam

வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பில் பேரிடர்களின் தாக்கம்

October 25 , 2023 398 days 311 0
  • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது (FAO) வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பில் பேரிடர்களின் தாக்கம் தொடர்பான அதன் முதல் வகையான அறிக்கையை வெளியிட்டது.
  • இதில் வருடாந்திர உலகளாவிய விவசாயம் தொடர்பான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலக நாடுகளானது ஆண்டுக்கு ஐந்து சதவீதத்தை அதாவது கிட்டத்தட்ட $120 பில்லியனுக்கும் மேலாக இழந்துள்ளது என குறிப்பிடப் பட்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம், வறட்சி, பூச்சிகள் தாக்குதல், புயல், நோய் மற்றும் போர் போன்ற பேரழிவுகளால் 1991 ஆம் ஆண்டு மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உணவு உற்பத்திகளில் $123 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • இதனைக் கொண்டு வருடத்திற்கு அரை பில்லியன் மக்களுக்குப் போதுமான அளவில் உணவளிக்கலாம்.
  • கடந்த மூன்று தசாப்தங்களாக $3.8 டிரில்லியன் பயிர் மற்றும் கால்நடை இழப்புகளுக்கு இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் வழி வகுத்துள்ளன.
  • கடந்த மூன்று தசாப்தங்களில் சராசரி வருடாந்திர தானிய இழப்புகளானது 69 மில்லியன் டன்களாக இருந்துள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டு பிரான்சில் விளைந்த மொத்த தானிய உற்பத்திக்கு சமமாக உள்ளது.
  • பழம் மற்றும் காய்கறி போன்றவற்றின் உற்பத்தியானது சுமார் 40 மில்லியன் டன்களையும், இறைச்சி, பால் மற்றும் முட்டைகளின் உற்பத்தியானது சுமார் 16 மில்லியன் டன்களையும் உலக நாடுகளானது இழந்துள்ளது.
  • விவசாயத் துறையில் நிகழ்ந்தப் பேரிடர்களால் ஏற்பட்ட விளைவால் சுமார் 23 சதவீதம் இழப்புகளானது நீடித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்