முதல் சர்வதேச வேளாண் ஹேக்கத்தான் மாநாட்டை விசாகப்பட்டினத்தில் ஆந்திரப்பிரதேச அரசு நடத்தவுள்ளது. நவம்பர் 15ல் தொடங்க உள்ள இந்த 3 நாள் மாநாட்டுக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வேளாண் நிபுணர்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு பங்குதாரர்கள் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.
ஆந்திர பிரதேச அரசோடு இணைந்து இந்திய தொழிற் கூட்டமைவு (Confederation of Indian Industry - CII) இந்த ஹேக்கத்தானை நடத்துகிறது.
இது புது வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த உலகம் முழுவதும் உள்ள பிரதிநிதிகள் பங்குபெறும் ஓர் முக்கியமான சர்வதேச ஹேக்கத்தான் நிகழ்வாகும்.
இந்நிகழ்ச்சியின் நிறைவு நாளன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பங்கேற்கவுள்ளார்.