வேளாண் உணவு உற்பத்தி முறை பற்றிய உலக வங்கி அறிக்கை
May 11 , 2024 196 days 254 0
உலக வங்கியானது, “உயிர் வாழக் கூடிய கிரகத்திற்கான வழிமுறைத் தொகுப்பு: வேளாண் உணவு அமைப்பில் நிகர சுழி உமிழ்வு நிலையை அடைதல்” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
உலகின் வேளாண் உணவு முறையானது ஆண்டிற்கு சுமார் 16 ஜிகா டன்கள் பசுமை இல்ல வாயுக்களை (GHG) வெளியிடுகிறது என்ற நிலையில் இது உலகளாவிய உமிழ்வுகளில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
அதிக வருமானம் கொண்ட நாடுகள் கால்நடை சார்ந்த பொருட்களின் மிகப்பெரிய நுகர்வோர் ஆக உள்ளதால், கால்நடைகள் ஒரு முக்கிய உமிழ்வு வெளியீட்டுக் காரணியாக உள்ளன.
இறைச்சி மற்றும் பால் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் மாசுபாட்டைச் சமாளிக்க கால்நடை வளர்ப்புக்கான நிதி உதவியை செல்வ வளம் மிக்க நாடுகள் குறைக்க வேண்டும்.
2016 ஆம் ஆண்டில் அனைத்து வேளாண் மானியங்களில் மூன்றில் ஒரு பங்கு இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு வழங்கப்பட்டது.
2030 ஆம் ஆண்டிற்குள் வேளாண் உணவு உற்பத்தி சார்ந்த உமிழ்வினைப் பாதியாகக் குறைக்கவும் மற்றும் 2050 ஆம் ஆண்டில் நிகரச் சுழிய உமிழ்வு என்ற இலக்கை அடைய உலகிற்கு உதவவும் வருடாந்திர முதலீடுகள் 18 மடங்கு அதிகரித்து 260 பில்லியன் டாலர் ஆக வேண்டும்.
இந்தியாவின் 8.8 மில்லியன் டீசல் எரிபொருளில் இயங்கும் பாசன நீரேற்றிகளில் கால் பங்கினை சூரிய சக்தியில் இயங்கும் நீரேற்றிகளாக மாற்றுவதன் மூலம், ஆண்டிற்கு 11.5 மில்லியன் டன்கள் வேளாண் உணவு உற்பத்தி சார்ந்த உமிழ்வைக் குறைக்கலாம்.
சீனா, பிரேசில், இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, ரஷ்யக் கூட்டமைப்பு, கனடா, பாகிஸ்தான் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் வேளாண் உணவு உற்பத்தி சார்ந்த உமிழ்வுகளில் முன்னணியில் உள்ள முதல் 10 நாடுகளாகும்.