TNPSC Thervupettagam

வேளாண் திட்டங்களின் விரிவாக்கம்

January 3 , 2025 4 days 76 0
  • மத்திய அரசானது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியன்று இரண்டு பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை 2025-26 ஆம் ஆண்டு வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உள்ளது.
  • அவை பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியனவாகும்.
  • இது முதன்மையான திட்டங்களை செயல்படுத்துவதில் தொழில்நுட்ப பயன்பாட்டு இணைப்பிற்காக தனியாக 824.77 கோடி ரூபாய் நிதியை உருவாக்கியுள்ளது.
  • இந்த 824.77 கோடி ரூபாயில் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தனி நிதியை (FIAT) உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நிதியானது YES-TECH, WINDS என்ற திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும்.
  • தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மகசூல் மதிப்பீட்டு அமைப்பு (YES-TECH) ஆனது, தொழில்நுட்பம் அடிப்படையிலான மகசூல் மதிப்பீடுகளுக்கு என குறைந்தபட்சம் 30% மதிப்புடன் மகசூல் மதிப்பீட்டிற்காக வேண்டி தொலைநிலை உணர்திறன் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • வானிலை தகவல் மற்றும் வலையமைப்புத் தரவு அமைப்புகள் (WINDS) ஆனது தொகுதி அளவில் தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS) மற்றும் பஞ்சாயத்து அளவில் தானியங்கி மழை அளவீட்டு அமைப்புகள் (ARGs) ஆகியவற்றினை அமைக்க திட்டம் இட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்